ஈபேவுக்காதரவாக ink-shop-india நிறுவனத்தின் பதில்:

அன்புடன் கொற்றவை,

தேவையிற்ற சர்ச்சைகளை கிளப்ப முய்ற்சிக்காதீர்கள். ஈபே பெரும் பணிகளை செய்து வருகிறது. அவர்களின் ஊக்கத்தை முடக்காதீர்கள். ஓய்வு நேரங்களில் வேறு ஏதாவது பயனுள்ள வேலையைப் பாருங்கள்.

எனது பதில்:

Hello, ink-shop-india (3710)

உங்களது ‘ஸ்டார்’ மதிப்பீட்டையும், உங்கள் கருத்தையும் பார்க்கும்போதே உறுதியாக தெரிகிறது, ஈபேயை உங்களை ’விற்பதற்காக’ மன்னிக்கவும்... ‘உங்கள் பொருட்களை’ விற்பதற்காக....பயன்படுத்தி வருகிறீர்கள் என்று...எனக்கு / குழுவுக்கு அறிவுரை கூறுவதற்கு பதில் நீங்கள் அதை தொடரலாம்...எப்படி அவ்வளவு உறுதியாக உங்களுக்கு தெரியும்...எனக்கு ஓய்வு நேரம் இருக்கிறதென்று....

நாங்கள் ஈபேயை எதிர்த்து வருகிறோம், இன்ன்க் ஷாப்பை இல்லை....சரியா? அவர்கள் எங்களுக்கு பதில் சொல்லட்டும்..

உங்கள் பொருளற்ற கருத்துக்கு இனிமேல் பதில் எதிர்பார்க்காதீர்கள்....எனக்கு இந்த விவகாரம் குறித்து செய்வதற்கு நிறைய இருக்கிறது.

· உங்களை விற்பது என்பது ஆணாதிக்க பார்வையில் சொல்லப்படும் உடல் விற்பனையல்ல.... முதலாளிகளிடம் மண்டியிடும் அடிமைச் சிந்தனை என்று பொருள் கொள்ள வேண்டும்.

இது தவிர ஈபே தளத்தில் வெளியிட்டுள்ள ‘பாலியல்’ விற்பனையாகும் என்ற பரிந்துரையையும் பார்க்க நேர்ந்தது.http://reviews.ebay.com/Sex-sells- eBay-style-using-gender-to-your-advantage?ugid=10000000001832065

பெண்களின் மனவோட்டம் பற்றிய குறைவான, ஆணாதிக்க மனப்பான்மையையே அது வெளிக்காட்டுகிறது Sex sells - eBay style; using gender to youradvantage : eBay Guides - பாலியல் விற்கும் - ஈபே பாணி: பாலின அடையாளத்தை உங்களுக்கு சாதகமாக பயன்படுத்துங்கள்..... என்பதே அது...

இவ்வெதிர்ப்பு சம்பந்தமான அணைத்து ஆவணங்களையும் அவர்களின் தொடர்பு முகவரிக்கு மென் கடிதமாக அனுப்பியுள்ளேன். அடுத்து நேரடியாக சென்று கொடுக்கப்படும்...குர்கானில் உள்ள அவர்கள் தலைமை அலுவலகத்திற்கும் கடிதம் அனுப்பப்படும்... தொடர்ந்து அவர்களுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறேன். உதவிகள் தேவை...இம்முயற்சி குறித்து உங்கள் தளங்களில் பதிவு செய்து ஆதரவு கோருங்கள்.

கைழுத்திடுங்கள்...நன்றி... http://www.change.org/petitions/ebayin-remove-the-gender-discriminating-...

0Encouragement