opposition to ebay translated in Tamil



ebay.in - பாலின பாகுபாடு போற்றும் மனப்பான்மை



மாசெஸ் அமைப்பு வாயிலாக ஈபேவின் பாலினவாத விளம்பரத்தைக் கண்டித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது.



http://www.change.org/petitions/ebay-india-remove-gender-discriminating-...

123 பேர் கையெழுத்திட்டுள்ளனர். மூத்த சமூக ஆர்வலர்கள், எழுத்தாளர்கள், மனித உரிமை போராளிகள் கையெழுத்திட்டுள்ளனர். வெளிநாட்டவரிடையேயும் இதற்கு ஆதரவ்வு கிடைத்துள்ளது. தொடர்ந்து ஈபேயை தொடர்பு கொண்டு இவிசயத்தில் கவனத்தைக் கோரி வந்தேன்...வழக்கமான பதில்கள்தான் வந்தன. ஒரு கட்டத்தில், நேற்று சற்று பொறுமை இழந்து, பாலினவாத உள்ளடக்கத்தை நீக்கவில்லையென்றால் தொடர் போராட்டங்கள் நடைபெறும் என்று எச்சரித்தபின்னர், எனக்கு ஒரு பதில் அவர்கள் ‘கருத்து குழுமம் வழியாக கிடைத்தது. வழக்கமான பதில்:



உறுப்பினர்களே,



“ஈபே எந்த வகையிலும், இனம், பாலியல், வயது இன்னும் இதர தன்மைகளின் அடிப்படையில் ஒருபுறச் சாய்வையோ, பாகுபாட்டையோ ஊக்குவிப்பதில்லை. பெண்கள், ஆண்கள் ஆகியோருக்கு எது கவர்ச்சிகரமான பேரமோ அதை வழங்கும் ஒரு முயற்சியே”. இது விற்பனைக்கான வகைப்பிரிவு மட்டுமே.



உங்கள் அக்கறை சம்பந்தமான கேள்விக்கு இது போதுமான விளக்கம் அளித்திருக்கும் என்று கருதுகிறோம்.



என்று பதில் வந்தது.



அதற்கு எனது பதில்:



திருமிகு. சீமா,



உங்கள் விளக்கங்களுக்கு நன்றி, அதுவும் இன்று ’டோல் ஃப்ரீ’ யில் உறுதியாக எனது எதிர்ப்பை வைத்த பின்னர் தொடர்புகொண்டுள்ளீர்கள். நான் / நாங்கள் வணிக கூட்டங்கள் அளிக்கும் இதுபோன்ற சட்ட ரீதியான பதங்களை, விளக்கங்களி நன்கு அறிவோம். //இது விற்பனைக்கான வகைப்பிரிவு மட்டுமே.// என்று சொல்லும் நீங்கள் ஏன் அதற்கு ‘தொழில்நுட்ப கருவிகள்’, ‘வாழ்வு பாணி’ க்கான பொருள்கள் என்று அந்த பொருட்களின் பயன்பாட்டை நேரடியாக குறிக்கும் பதத்தை பயன்படுத்தக்கூடாது. ஏன் பிரிவினைவாத உள்ளடக்கத்தோடு ’புனைச்சொல்லை’ பயன்படுத்தவேண்டும். சமூக நிறுவனங்கள் கட்டமைத்துள்ள ‘பாலியல்’ அடையாளத்தின் மீதே இது கட்டமைக்கப்பட்டுள்ளது. ‘ஆண்’, ‘பெண்’ ஆகியோருக்கு பொருத்தமானது எது என்கிற முடிவுக்கு ‘நீங்களோ’, உங்கள் நிறுவனமோ’ எப்படி வருகிறீர்கள். பொது புத்தி சார்ந்து இருப்போர் ஏற்கணவே நிலவும் ஆணாதிக்க ‘வார்ப்புகளால்’ மூளை மழுங்கடிக்கப்பட்டுள்ளனர், அதனால் அவர்கள் இந்த ‘கூறுணர்வு’ மிக்க பாகுபாட்டை கவனிப்பதில்லை. அதனால் பெரும்பான்மைக்கு பிரியமான....என்கிற விளக்கங்களை எனக்கு கொடுக்க வேண்டாம்.



அந்த பாகுபாடு போற்றும் உள்ளடக்கம் விலக்கப்படவில்லை என்றால், மன்னிக்கவும் ‘மாசெஸ்’ இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும்.



விளக்கத்திற்கு நன்றி
கொற்றவை



சிறு குறிப்பு: லைஃப் ஸ்டைல் – என்பது வாழ்வு முறை என்று மொழி பெயர்க்கப்படுகிறது – வாழ்வு முறை பொருள் என்று சொல்லும்போது அதை நாமும் வாழ்க்கைக்கான முறையாக ஏற்றுக் கொண்டதாகி விடும், வாழ்வு பாணி என்று மொழிபெயர்த்துள்ளேன்...அதிலும் எனக்கு உடன்பாடில்லை தான்...வாழ்வின் பாணியை மற்றவர் வரையறுக்கும் உரிமை இல்லை தான்...’life style’ என்பதற்கு ஒரு ஆங்கில மாற்றுப் பதத்தை யோசிக்க வேண்டும்...



அதேபோல் ஆண், பெண் இருமை வாதத்தின் படி இவர்கள் ஆணுக்கு, பெண்ணுக்கு என்று சொல்வார்களானால்....மாற்றுப் பாலினத்தவர் எப்பொருளையும் பயன்படுத்தும் தகுதியற்ற்வர் என்று சொல்கிறார்களா... – இந்த கேள்வியையும் அவர்கள் முன் வைப்பேன்.....



இந்த எதிர்ப்பில் பங்கெடுக்க விரும்புபவர்கள் மேற்சொன்ன சுட்டியில் கிளிக் செய்து கையெழுத்திடவும்.

Like this story?
Join World Pulse now to read more inspiring stories and connect with women speaking out across the globe!
Leave a supportive comment to encourage this author
Tell your own story
Explore more stories on topics you care about